LIVE
Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal • Stay updated with the latest Tamil Nadu news 24/7 Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal
Friday, October 23, 2026
Tamil Nadu

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் ! மதுரையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

Advertisement

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் ! மதுரையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியாக அவர் ஆட்சிக்கு வந்ததும் அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரம் தருவதாகத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் விஜய் அவர்கள் வெற்றி பெற்றதை அடுத்து முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளான ஜூன் 22, 2026 முதல் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல் படுத்த அறிவிப்பு வெளியிடபட்டது. அதன்படி ஜூன் 22 ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் 22 கார்ட் மோதிரம் வழங்க உத்தரவு பிறப்பிக்கபட்டது. முதற்கட்டமாக நேற்று மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் (CM VIJAY)விஜய் அவர்கள் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் துவங்கி வைக்கபட்டது.

திட்டத்தின் சிறப்பம்சம்:

  • தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் 22 கார்ட் மோதிரம் வழங்க அறிவிக்கபட்டுள்ளது.
  • அந்த மோதிரத்தில் தமிழ்நாடு அரசின் சின்னம், BIS ஹல்மார்க் முத்திரை மற்றும் தனிப்பட்ட வரிசை எண் வழங்கப்பட்டிருக்கும்.
  • இது TEMBERROOF பேக்கிங் மூலம் சீல் செய்யபட்டு பாதுகாப்பாக வழங்கபட்டிருக்கும்.
  • ஆண்டுக்குச் சுமார் 4.2 லட்சம் முதல் 4.4 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தின் தகுதிகள் என்ன?

  • தாய் தமிழ்நாட்டில் பிறந்தவராகவும் தமிழ் நாட்டில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
  • வெளி மாநிலத்தவர் இங்கு வசித்து அவர்களுக்குக் குழந்தை அரசுமருத்துவமனையில் பிறந்தால் அவர்கள் இந்தத் திட்டத்தில் தகுதியானவர்கள் இல்லை.
  • குழந்தை அரசு மருத்துவமனை/அரசு சுகாதார நிலையம்/ அரசு ஆரம்ப சுகாதார மையம் /மருத்துவ கல்லூரி மருத்துவமனை / மாவட்ட மருத்துவமனை ஆகியவற்றில் குழந்தை பிறந்திருக்க வேண்டும்.
  • கர்ப்பமான தாய் அரசு செவிலியரிடம் பதிவு செய்த அட்டை அதனுடன்கூடிய PICMI எண் பதிவு செய்து வைத்திருப்பது கட்டாயம்.
  • முதல் குழந்தைக்குதான் என்ற கட்டாயம் இல்லை. ஒரு தாய்க்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அத்தனை குழந்தைக்கும் மோதிரம் வழங்கப்படும். இரட்டை குழந்தையாக இருந்தாலும் இரண்டு குழந்தைகளுக்குமே மோதிரம் வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்:

  • குடும்ப அட்டை (Smart Card)
  • ஆதார் அட்டை (Aadthar Card)
  • PICMI எண்ணுடன் பதிவு செய்த அட்டை
  • குழந்தையின் பிறப்புசான்று அல்லது மருத்துவமனை பிரசவபதிவு சான்று
  • கூடுதல் ஆவணங்கள் தேவைப்படின் அதுவும் இணைக்க வேண்டும்.

தங்க மோதிரம் எப்போது கிடைக்கும்?

  • மருத்துவமனையில் பிறந்த குழந்தை Discharge summary செய்யப்படும் போதே மேற்கண்ட ஆவணங்களைச் சரிபார்த்து மோதிரம் வழங்கப்படும்.
  • மோதிரம் பெறுவதற்காகத் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.

எப்போது குழந்தைபிறந்தால் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம்?

  • ஜூன் 22,2026 முதல் மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் இந்தத் திட்டத்தில் தகுதியானவர்களாகக் கருதப்படுவர்.
  • அன்றிலிருந்து பிறந்த குழந்தைகளுக்குப் பிறப்பு சான்று வைத்து மோதிரம் பெற்றுக் கொள்ளலாம்.
  • 28 செப்டம்பர் 2026 அன்றிலிருந்து அரசு மருத்துவமனையில் (GH) பிறந்த குழந்தைகளுக்கு அன்றிலிருந்தே மோதிரம் வழங்கப்படும்.

OFFICIAL GO ORDER: CLICK HERE

Advertisement

Leave a Comment