வாரிசு சான்று (LEGAL HAIR CERTIFICATE) என்பது அரசின் அனைத்து விதமான சலுகைகளுக்கும் சொத்துகளை மாற்றுவதற்கும் தேவை படுகிறது. இறந்த ஒரு நபருக்கு அவரின் வாரிசுகள் இன்னர்தான் என்பதை அரசுக்கு தெரிவிக்க வாரிசு சான்று அவசியம் ஆகிறது. தாய்,தந்தையர் யார் இறந்தாலும் அவரின் குழந்தைகள் அல்லது தத்து குழந்தைகள் ஆகியோர் வாரிசு சான்று பெறுவது அவசியமாகிறது. வாரிசு சான்றை ஆன்லைன் மூலமாக சுலமாக வீட்டிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அனைத்து ஒரிஜினல் ஆவணங்களும் வீட்டிலிருந்து ஸ்கேன் செய்து அப்ளை செய்து கொள்ளலாம்.

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் ?
- இறந்தவர்களின் இறப்பு சான்றுகள் (Death Certificate)
- அவரின் திருமண சான்று (like ரேஷன் கார்டு,etc..)
- Smart Ration Card
- குழந்தைகளின் Aadhar Card
- இறந்தவரின் தாய் தந்தை இறப்பு சான்று(Death Certificate) உயிருடன் இருந்தால் ஆதார் அட்டை
- இறந்தவரின் தாய் தந்தைக்கு இறப்பு சான்று இல்லை எனில் AFFIDAVIT வைப்பது அவசியம்
எங்கு விண்ணபிக்கலாம் ?
- தமிழ்நாடு அரசால் (TN GOVT)அங்கீகரிக்க இ-சேவை (E-SEVAI CENTER) மையங்களில் நேரடியாக சென்று விண்ணபிக்கலாம்.
- அல்லது வீட்டிலியே CITIZEN LOGIN மூலம் உள்ளே சென்று விண்ணபிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது ?
- TNEGA PORTAL சென்று USER ID PASSWORD வைத்து LOGIN செய்ய வேண்டும்.
- ALREADY CAN NUMBER இருந்தால் LEGAL HAIR OPTION ஐ CLICK செய்து உள்ளே செல்ல வேண்டும். CAN NUMBER இல்லை என்றால்
- AADHAR NO வைத்து CAN NUMBER APPLY செய்ய வேண்டும்.
- உள்ளே சென்று நீங்கள் இறந்தவரின் சட்டபூர்வ வாரிசு என்பதை CLICK செய்ய வேண்டும். அல்லது ADOPTED CHILD என்றால் அதற்கான OPTION ஐ CLICK செய்ய வேண்டும்.
- உள்ளே கேட்கும் எல்லா தகவலையும் FULL செய்ய வேண்டும்.
- DECEASED வாரிசுகளை ஒவ்வொரு பெயராக FULL செய்ய வேண்டும் பிறகு SUBMIT செய்ய வேண்டும்
- NEXT PAGE OPEN ஆகும் அதில் SELF DECELERATION FORM DOWNLOAD செய்து அதனை PRINT எடுத்து APPLICANT SIGN செய்யத பின் SCAN செய்து UPLOAD செய்ய வேண்டும்.
- RECURRING DOCUMENTS கேட்கும் எல்லா DOCUMENTS உம் UPLOAD செய்ய வேண்டும்.
- பின்னர் MAKE PAYMENT என்ற OPTION வழியாக சென்று பணம் கட்ட வேண்டும். இறுதியாக வரும் ரசீதை எதிர்கால தேவைக்காக PRINT செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
CERTIFICATE எப்போது APPROVAL ஆகும் ?
- உங்களது DOCUMENTS அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் 10 முதல் 15 நாள்களில் APPROVE செய்து விடுவார்கள்.
- நீங்களே DOWNLOAD செய்து கொள்ளலாம்.
FREQUENTLY ASKED QUESTIONS (FAQ’S)
1.வாரிசு சான்று என்றால் என்ன ?
- இறந்த நபரின் சட்டப்பூர்வ வாரிசுகள் யார் என்பதை அரசு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தும் சான்று.
2.வாரிசு சான்று எதற்காக தேவைப்படுகிறது ?
- அரசின் பல்வேறு சேவைகள் மற்றும் சொத்து /உரிமை தொடர்பான தேவைகளுக்காக வாரிசு சான்று பயன்படுத்தப்படுகிறது.
3.யார் வாரிசு சான்றுக்கு விண்ணபிக்கலாம்?
- இறந்த நபரின் சட்டபூர்வமான வாரிசுகள் விண்ணபிக்கலாம்.
4.இறப்பு சான்றிதழ் கட்டாயமா?
- ஆம்.இறந்த நபருக்கான வாரிசு சான்றிதழ் என்பதால் இறப்பு சான்றிதழ் முக்கிய ஆவணமாகும்.
5.ONLINE யில் வாரிசு சான்று விண்ணப்பிக்க முடியுமா ?
- ஆம்.அரசு வழங்கும் ஆன்லைன் சேவை மூலம் விண்ணபிக்கும் வசதி உள்ளது.
6.விண்ணபத்தின் நிலையை எப்படி தெரிந்து கொள்வது?
- TNEGA STATUS சேவை தளத்தில் APPLICATION NO வைத்து செக் செய்து பார்க்கலாம்.


Leave a Comment