தமிழக அரசு 17.08.2026 அன்று முதல் பத்திர பதிவிற்கான புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் வீட்டிலிருந்தே பத்திரபதிவு மேற்க்கொள்ளலாம் என புதிய முயற்சியை தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்பித்து பதிவு செய்து கொள்ள முடியும். இதனால் குறிப்பிட்ட சில சார்பதிவாளர் அலுவலகளில் கூட்ட நெரிசல் கணிசமாக குறையும்.மேலும் அலுவலகங்களுக்கிடையேயான பணிச்சுமை சமநிலைபடுத்தபட்டு பதிவு பணிகள் விரைவாக நடைபெறும்.அதே வேலையில் பொதுமக்களின் காத்திருப்பு நேரம் குறைவதுடன் புதிய சேவைகளின் தரம் செயல்திறன் மற்றும் சேவை வழங்கும் திறனும் மேம்படும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
என்னென்ன பத்திரங்கள் பதிவு செய்யலாம்?
- வீடு மனை வாங்குவோர் சமந்தபட்ட கட்டுமான நிறுவன அலுவலகத்திலிருந்து ஆன்லைன் மூலமாக பத்திரபதிவு செய்யலாம்..
- முதல் விற்பனை மனை(first sale on plot) முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (first sale on flat)
- வங்கிகளில் பெரும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள் ஆன்லைனில் பதியலாம்.
- பொதுமக்கள் கட்டுமான நிறுவனங்கள் ஆவண எழுத்தர்கள் மற்றும் வங்கிகள், வழக்கறிஞர்கள் ஆன்லைனில் பத்திரபதிவு செய்யலாம்.

புதிய நடைமுறை
- பதிவுதுறை இணையதளத்தில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நிலவிற்பனையாளர்கள் தங்களுக்கான பிரத்யேக உள்நுழைவினை தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்பிக்கலாம்.
- ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள்,எழுதி பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் விவரங்கள் மற்றும் ஆதார் அட்டை எண் மேலேற்றம் செய்ய வேண்டும்.
- ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகளின் புகைப்படம் எடுக்கபட்டு கைரேகை அல்லது கருவிழிபடலம் வழி ஆதார் சரிபார்க்கபட வேண்டும்.
- இணையவழி கட்டணம் செலுத்தி இணைய வழியிலே சமந்தபட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆவணத்தை தாக்கல் செய்யலாம்.
- ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்படின் சார்பதிவாளர் இணையவழியில் கோரும் தகவலுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கலாம்.
- சமர்பிக்கபட்ட அன்றே அல்லது அடுத்த வேலை நாளுக்குள் பதிவுசெய்யப்பட்ட ஆவணம் மற்றும் கட்டண ரசீது சமந்தபட்ட சார்பதிவாளரின் மின்கையொப்பத்துடன் ஆவனதாரருக்கு இணையவழியில் அனுப்பி வைக்கபடும்.
- பதிவு செய்யப்பட்ட 60 நாட்கள் வரை பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- இது தொடர்பான சந்தேகங்களுக்கு நிவர்த்தி செய்து கொள்ள பிரத்யேகமாக ஓர் உதவி மையம் செயல்படும்.
தேவைப்படும் உபகரணங்கள் :
- இணைய இணைப்பு (internet connection)
- ஆதார் ஆணையத்தால் அங்கீகரிக்கபட்ட L1 & L0 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலம் கவரும் கருவி
- புகைப்படகருவி (Webcam)
OFFICIAL WEBSITE : CLICK HERE
Frequently Asked Questions -FAQ
வருகை இல்லாத ஆவண பதிவிற்கு வருகை இல்லாத ஆவண பதிவிற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? மற்றும் என்னென்ன உபகரணங்கள் தேவை?
ஆதார் கார்டு
பான் கார்டு
பவர் டாக்குமெண்ட்
வில்லங்கச் சான்று
What documents are required for the registration of a document without the personal appearance of the parties?What documents are required for the registration of a document without the personal appearance of the parties?
Aadhaar card,
PAN card,
Power of Attorney document.
Encumbrance Certificate
வீட்டில் இருந்து பத்திரப்பதிவு செய்ய என்னென்ன உபகரணங்கள் தேவை
Mantra L One Device
Speed Scanner Machine
Webcam
Leave a Comment