LIVE
Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal • Stay updated with the latest Tamil Nadu news 24/7 Welcome to TNUpdate — Tamil Nadu's fastest news portal
Tuesday, June 30, 2026
INFORMATION

புதிய ரேஷன் கார்டு எடுப்பது எப்படி 2026/ NEW RATION CARD APPLY 2026

Advertisement
  • எந்தந்த இடங்களில் ரேஷன் கார்டு பயன்படும் ?
    • Ration card-ல் பெயர் நீக்கம் செய்வது எப்படி ?
    • Ration card-ல் பெயர் சேர்ப்பது எப்படி ?
    • விண்ணப்பிப்பது எப்படி ?
    • எப்போது ரேஷன் கார்டு கிடைக்கும் ?
    • TNPDS பெற தேவையான ஆவணங்கள் !

எந்தந்த இடங்களில் ரேஷன் கார்டு பயன்படும் ?

  • பொதுவாக ரேஷன் கார்டு அனைத்து அரசு அலுவலகத்தில் ஒரு அடிப்படை ஆதார ஆவணமாக தேவைப்படுகிறது.
  • ஒரு குடும்பத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு தேவையான சான்றிதழ்கள் வாங்குவதற்கு இ-சேவை மையங்களில் ரேஷன் கார்டு தான் அடிப்படை ஆவணமாக தேவைப்படுகிறது.
  • சாதி சான்றிதழ், வருமான வரி சான்று, இருப்பிட சான்று, முதல் பட்டதாரி சான்று, முதியோர் பென்ஷன், குடும்ப காப்பீடு, மகளிர் உரிமை தொகை (தற்போது TVK அரசு 2500) போன்ற அடிப்படை தேவைகளுக்கு RATION CARD இன்றியமையாத ஆவணமாக கருதப்படுகிறது.

Smart Ration card-ல் name remove member பெயர் நீக்கம் செய்வது எப்படி ?

  • ஒருவர் திருமணமாகும் போது தனியாக ரேஷன் கார்டு விண்ணப்பித்து பெற முடியும்.
  • பெயர் நீக்கம் செய்ய திருமண பத்திரிக்கை, பெயர் நீக்கம் செய்பவரின் ஆதார் அட்டை, தாயார் வீட்டில் ரேஷன் கார்டு குடுத்த மொபைல் எண் தேவை(OTP PURPOSE)
  • எதிர்பாரத விதமாக ஒருவர் இறக்கும்போது இறப்பு சான்றிதழ் வைத்து பெயர் நீக்கம் செய்யலாம்.

TNPDS Smart Ration card-ல்Add member பெயர் சேர்ப்பது எப்படி ?

Tnpds Add Member Online Procedure

  • திருமணம் ஆகி மருமகள் வரும்போது அவரின் பெயரை தாயார் வீட்டு ரேஷன் கார்டு-ல் நிக்கி தங்களது அட்டையில் இணைத்து கொள்ளலாம்.
    • குழந்தை பிறந்த பின்பு குழந்தையின் பிறப்பு சான்று OR ஆதார் அட்டை வைத்து பெயரை சேர்த்து கொள்ளலாம்.

Smart Ration card பெற தேவையான ஆவணங்கள் !

  • புதிய குடும்பஅட்டை (tnpds Smart Card NEW RATION) பெற
    • சொந்த வீடாக இருந்தால் சொத்துவரி ரசீது
    • வாடகை வீடாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம்
    • GAS BILL
    • குடும்ப உறுப்பினர்களின் + குடும்ப தலைவர் ஆதார் அட்டை ஒரிஜினல்
    • குடும்ப தலைவரின் புகைபடம்
    • குடும்ப தலைவரின் கைபேசி எண்

TNPDS Smart Ration cardApply Online விண்ணப்பிப்பது எப்படி ?

 Step 1 – www.tnpds.in என்ற இணையதள முகவரியில் சென்று

Step 2- முகப்பில் உள்ள புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்ற buttonஐ கிளிக் செய்யவும்

Step 3 – அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை பூர்த்தி செய்யவும்.

Step 4 – குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை பூர்த்தி செய்யவும்

Step 5 – குடும்ப தலைவரின் புகைபடத்தை பதிவேற்றம் செய்யவும்

Step 6 – கடைசியாக தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்

Step 7 – உறுதிமொழி Buttonஐ Click செய்து விவரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்தவும்.

Step 8 – உங்களது கோரிக்கை பெற்ற உடன் APPLICATION NUMBERஐ குறித்து வைத்து கொள்ளவும்

Step 9 – புதிய மின்னனு அட்டைக்கான விண்ணப்ப நிலை Button Click செய்து Application No ஐ உள்ளீடு செய்யவும்

Step 10 – Application No உள்ளீடு செய்த பின்னர் மேலே விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யவும்.

எப்போது ரேஷன் கார்டு கிடைக்கும் ?

     www.tnpds.in என்ற இணையதளத்தில் புதிய மின்னனு அட்டைக்கான விண்ணப்ப நிலை Button Click செய்து Application No ஐ உள்ளீடு செய்யவும்

அதில் விண்ணப்பம் யாரிடம் உள்ளது என்ற விவரம் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பம் ஒப்புதல் பெற்ற பின்னர் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Ration card Rprovel ஆனதும் தங்களது கைபேசிக்கு குறுஞ்செய்தி வரும். அதில் கடைக்காரரின் Mobile No மற்றும் கடையின் No குறிக்க பெற்றிருக்கும். அதனை வைத்து கடைக்காரரை தொடர்பு கொண்டு பேசலாம். பின்னர் அட்டை நமது கையில் கிடைக்கும்.

உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க வேண்டுமா எங்களை தொடர்பு கொள்ளுங்கள். M.சந்தோஷ் Cell – 860895139

அனைத்து மாவட்டத்திற்கும்Total Tamilnadu NEW RATION CARD விண்ணபித்து தரப்படும்.

Advertisement

Leave a Comment